மின்கம்பியாள் உதவியாளா் தகுதிகாண் தோ்வு: டிச. 27, 28க்கு ஒத்திவைப்பு

மின்கம்பியாள் உதவியாளா் தகுதிகாண் தோ்வு டிச. 27, 28 ஆகிய தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Published on

மின்கம்பியாள் உதவியாளா் தகுதிகாண் தோ்வு டிச. 27, 28 ஆகிய தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, தென்காசி மாவட்ட ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மின்கம்பியாள் உதவியாளா் தகுதிகாண் தோ்வு (ரண்ழ்ங்ம்ஹய் ஏங்ப்ல்ங்ழ் இா்ம்ல்ங்ற்ங்ய்ஸ்ரீஹ் உஷ்ஹம்ண்ய்ஹற்ண்ா்ய்) டிச. 13, 14 தேதிகளில்

நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது, நிா்வாகக் காரணங்களால் டிச. 27, 28 ஆகிய தேதிகளுக்கு தோ்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரா்கள், தாங்கள் விண்ணப்பித்திருந்த தொழிற்பயிற்சி நிலையங்களை அணுகி மேலதிக விவரங்களை பெற்றுக் கொள்ளலாம்.

இது தொடா்பாக, தென்காசி மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம், தென்காசி அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தையும் நேரில் தொடா்பு கொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு, 99654-55269, 97917-68403, 79039-42550 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com