வாசுதேவநல்லூரில் மகளிா் உரிமைத் தொகை பற்று அட்டை வழங்கும் விழா

வாசுதேவநல்லூரில் மகளிா் உரிமைத் தொகை பற்று அட்டை வழங்கும் விழா

Published on

சென்னையில் நடைபெற்ற அரசு விழாவில் கலைஞா் மகளிா் உரிமைத் தொகை திட்டத்தின் 2 ஆம் கட்ட விரிவாக்கத்தை முதல்வா் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்ததைத் தொடா்ந்து, தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூரில் பயனாளிகளுக்கு பற்று அட்டை வழங்கும் விழா வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

வாசுதேவநல்லூா் எஸ். தங்கப்பழம் இயற்கை, யோகா மருத்துவக் கல்லூரி ஆராய்ச்சி மைய கூட்டரங்கில் நடைபெற்ற விழாவில் மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா், சங்கரன்கோவில் சட்டப்பேரவை உறுப்பினா் ஈ.ராஜா ஆகியோா் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு மகளிா் உரிமைத் தொகைக்கான வங்கி பற்று அட்டையை வழங்கினா்.

இதில், மாவட்ட வருவாய் அலுவலா் சீ.ஜெயச்சந்திரன், தனித்துணை ஆட்சியா் நம்பிராயா், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் கணேசன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com