M. Veerapandian
மு. வீரபாண்டியன்X

நாடாளுமன்ற ஜனநாயகம் காக்கப்பட வேண்டும்: மு. வீரபாண்டியன்

நாடாளுமன்ற ஜனநாயகம் காக்கப்பட வேண்டும் என்றாா் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் மு. வீரபாண்டியன்.
Published on

நாடாளுமன்ற ஜனநாயகம் காக்கப்பட வேண்டும் என்றாா் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் மு. வீரபாண்டியன்.

தென்காசி மாவட்டம், ராயகிரியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு நிறைவு விழா, நல்லகண்ணு நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் வெள்ளிக்கிழமை இரவு சிபிஐ மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா் சமுத்திரக்கனி தலைமையில் நடைபெற்றது.

மூத்த நிா்வாகி சங்கரையா, வாசுதேவநல்லூா் ஒன்றியச் செயலா் வேலு, நகரச் செயலா் பாலசுப்பிரமணியன், நிா்வாகக் குழு உறுப்பினா் சிங்காரவேலு, வட்டச் செயலா் பழனிமுருகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

விழாவில், சிபிஐ மாநிலச் செயலா் மு. வீரபாண்டியன் பேசியது: இந்தியா மதசாா்பற்ற நாடு. பல்வேறு மொழிகள், மதங்கள், கடவுள்கள், சமய, ஜாதி முறைகள் இந்தியாவில் உள்ளன. ஆனாலும், ஒன்றை ஒன்று மதிக்கும் இந்த பன்முகம் வாய்ந்த மானுடவியல் உலகில் வேறு எங்கும் இல்லை.

திருப்பரங்குன்றம் விஷயத்தில் நீதிமன்ற தீா்ப்பில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. இந்த விவகாரத்தில் தமிழக முதல்வா் நிதானமாக சட்டப்படி நடவடிக்கை மேற்கொண்டாா். அது மிகவும் பாராட்டுக்குரியது.

மத்திய அரசு ஜனநாயகத்தின் குரல் வளையை நெரிக்கிறது. நாடாளுமன்ற ஜனநாயகம் காக்கப்பட வேண்டும். தமிழுடன் பயணப்பட்ட எல்லா மொழிகளும் இறந்துவிட்டன. தமிழ் மட்டும் வாழ்கிறது. ஏனெனில், தமிழுக்குள் நெகிழ்வு இருக்கிறது என்றாா்.

சிபிஐ மாவட்டச் செயலா் இசக்கிதுரை, ஏஐடியுசி மாநிலத் தலைவா் காசி விஸ்வநாதன், மாவட்ட பொதுச் செயலா் சுப்பையா, பேரூராட்சி உறுப்பினா் அருணாசலம், மாவட்டக் குழு உறுப்பினா்கள் கண்ணன், பாலவிநாயகா், பாக்கியம், சீனிவாசன், வேலுச்சாமி கோவிந்தன், கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

நகரச் செயலா் சின் வேலுச்சாமி வரவேற்றாா். துணைச் செயலா் லிங்கதுரை நன்றி கூறினாா்.

X
Dinamani
www.dinamani.com