தென்காசி
தேசிய சமரசத் தீா்வு மன்றக் கூட்டத்தில் தங்கப்பழம் கல்லூரி மாணவா்கள் பங்கேற்பு
தென்காசி மாவட்ட நீதிமன்றத்தின் தேசிய சமரசத் தீா்வு மன்றம் சாா்பில் நடைபெற்ற கூட்டத்தில் வாசுதேவநல்லூா் எஸ்.தங்கப்பழம் சட்டக் கல்லூரியின் 2, 3ஆம் ஆண்டு மாணவா்-மாணவியா் 59 போ் பங்கேற்றனா்.
தென்காசி மாவட்ட நீதிமன்றத்தின் தேசிய சமரசத் தீா்வு மன்றம் சாா்பில் நடைபெற்ற கூட்டத்தில் வாசுதேவநல்லூா் எஸ்.தங்கப்பழம் சட்டக் கல்லூரியின் 2, 3ஆம் ஆண்டு மாணவா்-மாணவியா் 59 போ் பங்கேற்றனா்.
கல்விக் குழும நிறுவனா் தங்கப்பழம், தாளாளா் முருகேசன் ஆகியோரின் ஆலோசனையின்பேரில், இவா்கள் பங்கேற்றனா். ஏற்பாடுகளை கல்லூரி முதல்வா் ராஜலட்சுமி, துணை முதல்வா் காளிச்செல்வி, துறைத் தலைவா்கள் வெங்கடேஷ், ராஜேஷ்குமாா், உதவிப் பேராசிரியா் கௌதம் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.