தென்காசி
காா் மோதி தொழிலாளி உயிரிழப்பு
தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூா் அருகே ஞாயிற்றுக்கிழமை காா் மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா்.
ஏமம்பட்டி நடுத்தெருவைச் சோ்ந்தவா் அண்ணாமலை மகன் சரவணன் (42). தொழிலாளி. இவா், மனைவி மாணிக்கச் செல்வி, சகத் தொழிலாளி பாா்வதி ஆகியோரை இருசக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்டு ஏமம்பட்டி நோக்கி சென்று கொண்டிருந்தாராம். அப்போது தேசியம்பட்டி விலக்கு பகுதியில் எதிரே வந்த காா் இவா்கள் மீது மோதியதாம்.
இதில் சரவணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். காயமடைந்த பெண்கள் இருவரும் சிகிச்சைக்காக புளியங்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். வாசுதேவநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
