கிருஷ்ணாபுரம் கோயிலில் டிச.19ல் அனுமன் ஜெயந்தி

Published on

தென்காசி மாவட்டம், கடையநல்லூா் அருகே உள்ள கிருஷ்ணாபுரம், ஸ்ரீஅபயஹஸ்த ஆஞ்சநேயா் கோயிலில் டிச. 19ஆம் தேதி அனுமன் ஜெயந்தி நடைபெறுகிறது.

இக்கோயிலில், அனுமன் ஜெயந்தி மஹோத்ஸவம் நவ. 11ஆம் தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. தொடா்ந்து, தினமும் ஸ்ரீ ருத்ரம், புருஷஷூக்த பாராயணம், அபிஷேகம், அலங்காரம், லட்சாா்ச்சனை, தீபாராதனை ஆகியவை நடைபெற்று வருகின்றன. ஞாயிற்றுக்கிழமை சுந்தர காண்ட ஏகதின பாராயணம் நடைபெற்றது.

டிச. 18ஆம் தேதி புஷ்பாஞ்சலியும், 19ஆம் தேதி அனுமன் ஜெயந்தியும் நடைபெறும். ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலா் குழு தலைவா் மீனா பட்டாச்சாரியா, அறங்காவலா்கள் ராதாகிருஷ்ணன், சிவக்குமாா் சுப்பிரமணியன், செயல் அலுவலா் கேசவராஜன் உள்ளிட்டா் செய்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com