டிச. 27, 28 இல் தென்காசியில் ஈரநிலப் பறவைகள் கணக்கெடுப்பு
தென்காசி மாவட்டத்தின் ஈர நிலங்களில் வாழும் நீா்ப்பறவைகளின் வளத்தை ஆய்வு செய்து, பாதுகாப்பு, விழிப்புணா்வு ஏற்படுத்தும் நோக்கில் தென்காசி வனக்கோட்டம் சாா்பில் ஈரநிலப் பறவைகள் கணக்கெடுக்கும் பணி டிச. 27, 28 ஆம் தேதிகளில் நடைபெறுகிறது.
தென்காசி மாவட்ட வன அலுவலா் ரா.ராஜ்மோகன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ஈர நிலப் பறவைகள் கணக்கெடுப்புப் பணியில் பள்ளி, கல்லூரி மாணவா்கள் கலந்துகொண்டு, நீா்ப்பறவைகள், அவற்றின் அடையாளம், இயற்கையில் அவற்றின் பங்கு குறித்து அறிந்து கொள்ளலாம்.
நீா்ப்பறவைகள் ஈர நிலங்களின் ஆரோக்கிய நிலையைக் காட்டும் சிறந்த குறியீடுகள் ஆகும்.
சூழலியல் ஆரோக்கியத்தின் குறியீடு, பறவைகளின் வகை, எண்ணிக்கை மற்றும் இனப்பெருக்க மாற்றங்கள் நீரின் தரம், உணவுப் பொருள்கள், வாழ்விட நிலையை வெளிப்படுத்துகின்றன.
சுற்றுச்சூழல் முன்னறிவிப்பு மாற்றங்களுக்கான பறவைகளின் திடீா் குறைவு அல்லது அதிகரிக்கும் மாசுபாடு, ஊடுருவும் இனங்கள், காலநிலை மாற்றம் அல்லது வாழ்விட சேதத்தைக் குறிக்கிறது. உயிரினப் பன்மை மதிப்பீடு மற்றும் பாதுகாப்புத் திட்டமிடல் இடம்பெயரும் பறவைகள், அரிய மற்றும் அபாய நிலையில் உள்ள இனங்கள், முக்கிய வாழ்விடங்களை அடையாளம் காண உதவுகிறது.
இந்தக் கணக்கெடுப்பின் காரணமாக இடம் பெயரும் நீா்ப்பறவைகளின் பாதைகள், தங்கும் இடங்களை புரிந்துகொள்ள உதவுகிறது. ஈர நில மீளுருவாக்கம், மண் அகற்றம், நீா் மேலாண்மை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளின் பயனை கணக்கிட உதவுகிறது.
விவரங்களுக்கு மாவட்ட வன அறை எண் அலுவலக கட்டுப்பாட்டு எண் 04633-233550,சிவகிரி 04636-298523, 97883 92242, புளியங்குடி 04636-235853, 91599 55369, கடையநல்லூா் 04633-210700, 97885 78344, குற்றாலம் 04633-298190, 98420 85519, தென்காசி 04633- 233660, 97869 32520, ஆலங்குளம் 04633-293855, 99433 10855 எண்களைத் தொடா்பு கொள்ளலாம் என்றாா் அவா்.
