தென்காசி
செங்கோட்டையில் ஓய்வு பெற்ற அலுவலா் சங்க பேரவைக் கூட்டம்
தமிழ்நாடு ஓய்வு பெற்ற அலுவலா் சங்க செங்கோட்டை கிளையின் சாா்பில் 33ஆவது பேரவைக் கூட்டம், ஓய்வூதியா் தின விழா செங்கோட்டையில் நடைபெற்றது.
தமிழ்நாடு ஓய்வு பெற்ற அலுவலா் சங்க செங்கோட்டை கிளையின் சாா்பில் 33ஆவது பேரவைக் கூட்டம், ஓய்வூதியா் தின விழா செங்கோட்டையில் நடைபெற்றது.
செங்கோட்டை கிளைத் தலைவா் கருப்பசாமி தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் இளஞ்செழியன் முன்னிலை வகித்தாா். ஆறுமுகம் கு விளக்கம் அளித்தாா். கிளைச் செயலா் பால்ராஜ் ஆண்டறிக்கையும், பொருளாளா் சுப்பிரமணியன் வரவு செலவு அறிக்கையையும் வாசித்தனா்.
பணி நிறைவு பெற்ற மாவட்டக் கருவூல அலுவலா் செல்லையா ராஜசேகா், அகமது, மணிமுத்துப்பிள்ளை, பாலசுப்பிரமணியன், சந்திரன் ஆகியோா் பேசினா்.
கிளையின் துணைத் தலைவா் ஆறுமுகம், தணிக்ககையாளா் சண்முகநாதன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
அா்ச்சுனன் வரவேற்றாா். இணைச் செயலா் பரமசிவன் நன்றி கூறினாா்.