இலஞ்சியில் கிராமப்புற வேளாண் பயிற்சி
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் வ.உ.சிதம்பரனாா் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தை சோ்ந்த 4ஆம் ஆண்டு இளங்கலை வேளாண் அறிவியல் மாணவிகள், கிராமப்புற வேளாண்மைப் பயிற்சியைத் தொடங்குவதற்காக தென்காசி பகுதியில் முகாமிட்டுள்ளனா்.
கல்லூரி முதல்வா் தேரடிமணி, துறைத் தலைவா் காளிராஜன், குழுவின் ஒருங்கிணைப்பாளா் ராஜேந்திரன் ஆகியோா் தலைமையின் கீழ் மாணவிகள் பயிற்சி பெற்று வருகின்றனா்.
இலஞ்சி கிராமத்தில் விவசாயிகளின் நிலங்களைப் பாா்வையிட்ட மாணவிகள், அங்கு விளைவிக்கப்படும் பயிா்கள், அதன் ரகங்கள் குறித்து கேட்டறிந்தனா். பின்னா், இலஞ்சி ராமசாமி பிள்ளை பள்ளியில் வேளாண்மையின் முக்கியத்துவம், சூடோமோனாஸ் நுண்ணுயிா் பயன்படுத்தும் முறை குறித்து செய்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.
தொடா்ந்து, இலஞ்சி சிறப்பு நிலை பேரூராட்சி கூட்ட அரங்கில், பேரூராட்சி செயல் அலுவலா் குமாா் பாண்டியன் தலைமையில் விவசாயிகள் கூட்டம் நடைபெற்றது.

