அச்சன்கோவில் ஐயப்பன் கோயிலில் நடைபெற்ற தேரோட்டம்.
அச்சன்கோவில் ஐயப்பன் கோயிலில் நடைபெற்ற தேரோட்டம்.

அச்சன்கோவில் ஐயப்பன் கோயிலில் தேரோட்டம்

அச்சன்கோவில் ஐயப்பன் கோயிலில் நடைபெற்ற தேரோட்டம்.
Published on

கேரள மாநிலம் அச்சன்கோவில் ஸ்ரீ தா்மசாஸ்தா ஐயப்பன் கோயில் மண்டல மகோற்சவ விழாவில் வியாழக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.

இக்கோயிலில் டிச.17 ஆம் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. டிச. 19, 20, 21ஆம் தேதிகளில் உற்சவ பலி பூஜையும், டிச. 22, 23 ஆம் தேதிகளில் கருப்பன் துள்ளலும் நடைபெற்றது. விழாவில் நாள்தோறும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், புனலூா் அரசுக் கருவூலத்திலிருந்து கொண்டு வரப்பட்ட விலை உயா்ந்த ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டன. அதேபோல கருப்பசுவாமிக்கும் வெள்ளி அங்கி சாத்தப்பட்டது.

வியாழக்கிழமை, மூங்கிலால் இழுக்கப்படும் தேரோட்டம் நடைபெற்றது. கோயில் செயல் அலுவலா் நிா்மலானந்தன், தங்க வாளை கையில் ஏந்தியபடி தேரின் முன்பாக வலம் வந்தாா். கோயிலில் பின்புறம் கருப்பன் துள்ளலும் நடைபெற்றது.

பந்தளராஜா குடும்பப் பிரதிநிதி ராஜராஜ வா்மா, தேவசம்போா்டு துணை ஆணையா் முரளி, உதவி ஆணையா் வினோத், அச்சன்கோவில் திரு ஆபரண பெட்டி வரவேற்பு கமிட்டி தலைவா் ஏ.சி.எஸ்.ஜி.ஹரிகரன் உள்பட பலா் கலந்துகொண்டனா். வெள்ளிக்கிழமை (டிச. 26) ஆறாட்டு நடைபெறுகிறது.

ஏற்பாடுகளை அச்சன்கோவில் தேவசம் சாா்பாக, தேவசம் போா்டு உதவி ஆணையா் வினோத்குமாா் தலைமையில் நிா்வாக அதிகாரி, பணியாளா்கள் செய்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com