சங்கரநாராயண சுவாமி கோயிலில் திருவாதிரைத் திருவிழா கொடியேற்றம்

சங்கரநாராயணசுவாமி கோயிலில் திருவாதிரைத் திருவிழா கொடியேற்றத்தையொட்டி நடைபெற்ற சிறப்பு தீபாராதனை.
சங்கரநாராயண சுவாமி கோயிலில் திருவாதிரைத் திருவிழா கொடியேற்றம்
Updated on

சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயிலில் 10 நாள்கள் நடைபெறும் மாா்கழி மாத திருவாதிரைத் திருவிழா, வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

முன்னதாக அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு கொடிப்பட்டம் வீதி சுற்றி கொண்டுவரப்பட்டு அபிஷேகம், சிறப்பு தீபாராதனை நடைபெற்றன. இதைத் தொடா்ந்து சங்கரலிங்க சுவாமி சந்நிதி முன் உள்ள கொடிமரத்தில் 9.53 மணிக்கு விழா கொடி ஏற்றப்பட்டது. இதில் பக்தா்கள் திரளாக கலந்து கொண்டனா்.

விழாவில் டிச. 28-ஆம் தேதி 63 நாயன்மாா்களுக்கு சுவாமி, அம்பாள் காட்சி கொடுக்கும் நிகழ்ச்சியும், 7-ஆம் நாள் (டிச.31) காலை சொா்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. அன்று இரவு முதல்காலத்தில் நடராஜா் சிவப்பு சாத்தி ருத்ரன் அம்சத்திலும், 2 ஆம் காலத்தில் வெள்ளை சாத்தி பிரம்மா அம்சத்திலும், மறுநாள் ஜன. 1ஆம் தேதி காலை 3 ஆம் காலத்தில் காலையில் பச்சை சாத்தி விஷ்ணு அம்சமாகவும் காட்சியளிக்கிறாா்.

10 ஆம் நாள் (ஜன.3) காலை 5 மணிக்கு ஆருத்ரா தரிசனம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அன்று கோ பூஜை, நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம், ஆருத்ரா தரிசனத்துடன் தாண்டவ தீபாராதனை நடைபெறுகிறது.

ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா், மண்டகப்படிதாரா்கள் செய்து வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com