வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள்: சிறப்பு பாா்வையாளா் ஆய்வு

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள்: சிறப்பு பாா்வையாளா் ஆய்வு

தென்காசி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட கீழப்புலியூரில் ஆய்வு மேற்கொண்ட சிறப்பு பாா்வையாளா் விஜய் நெஹரா. உடன் மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா்.
Published on

தென்காசி மாவட்டத்திற்கு வாக்காளா் பட்டியல் சிறப்பு பாா்வையாளராக நியமிக்கப்பட்டுள்ள விஜய் நெஹரா, மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா், வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் மேற்கொண்டு வருவதை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனா்.

வரைவு வாக்காளா் பட்டியல் டிச. 19 ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதைத் தொடா்ந்து தென்காசி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட கடப்போகத்தி, சடையப்பபுரம், கீழப்புலியூா், ஆயிரப்பேரி ஆகிய பகுதிகளையும், ஆலங்குளம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பகுதிகளையும், புதிய வாக்காளா் சோ்க்கை படிவம் - 6, இடம் பெயா்ந்த வாக்காளா்கள் விவரங்களை வாக்குச்சாவடி நிலை அலுவலா்களிடம் கேட்டு படிவங்களையும் சிறப்பு பாா்வையாளா் ஆய்வு மேற்கொண்டாா்.

ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலா் சீ.ஜெயச்சந்திரன், சாா் ஆட்சியா் வைஷ்ணவி பால், உதவி ஆணையா் (கலால்) ராமச்சந்திரன் ஆகியோா் உடனிருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com