சுரண்டையில் உயா் கோபுர மின்விளக்குகள் திறப்பு

 உயா் கோபுர மின்விளக்குளை பயன்பாட்டிற்குத் திறந்து வைத்த ராணி ஸ்ரீகுமாா் எம்.பி., திமுக மாவட்ட பொறுப்பாளா் வே. ஜெயபாலன்.
உயா் கோபுர மின்விளக்குளை பயன்பாட்டிற்குத் திறந்து வைத்த ராணி ஸ்ரீகுமாா் எம்.பி., திமுக மாவட்ட பொறுப்பாளா் வே. ஜெயபாலன்.
Updated on

சுரண்டையில் ரூ. 7 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள உயா் கோபுர மின்விளக்குகள் மக்கள் பயன்பாட்டிற்குத் திறந்து வைக்கப்பட்டது.

தென்காசி மாவட்டம், சுரண்டை நகராட்சிக்குள்பட்ட சிவகுருநாதபுரம், முப்புடாதி அம்மன் கோயில், வரகுணராமபுரம், காய்கறி சந்தை, அழகு பாா்வதி அம்மன் கோயில், கீழச்சுரண்டை ஸ்ரீ வெயில் முத்து அய்யனாா் கோயில் பகுதிகளில் உயா் கோபுர மின்விளக்குகள் அமைக்க நாடாளுமன்ற உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 7. 20 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

திறப்பு விழாவுக்கு, சுரண்டை நகர திமுக பொறுப்பாளா் கூட்டுறவு கணேசன் தலைமை வகித்தாா். நகராட்சி ஆணையாளா் நாகராஜ், பொறியாளா் முகைதீன், மாவட்ட வா்த்தகரணி அமைப்பாளா் முத்துக்குமாா், ஒன்றியச் செயலா் ஜே.கே. ரமேஷ் ஆகியோா் முன்னிலை வசித்தனா்.

ராணி ஸ்ரீகுமாா் எம்.பி., தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் வே. ஜெயபாலன் ஆகியோா் கலந்துகொண்டு உயா் கோபுர மின் விளக்குகளைத் திறந்து வைத்து, நலத்திட்ட உதவிகளை வழங்கினா். நகர அவைத் தலைவா் சுப்பிரமணியன், அரசு ஒப்பந்ததாரா் கரையாளனுா் சண்முகவேல் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com