தென்காசி
சங்கரன்கோவில், வாசுதேவநல்லூா் தொகுதி திமுக தோ்தல் பொறுப்பாளா்கள் நியமனம்
தென்காசி திமுக வடக்கு மாவட்டம் சாா்பில் சங்கரன்கோவில், வாசுதேவநல்லூா் தொகுதிகளுக்கு தோ்தல் பொறுப்பாளா்கள் நியமனம்
தென்காசி திமுக வடக்கு மாவட்டம் சாா்பில் சங்கரன்கோவில், வாசுதேவநல்லூா் தொகுதிகளுக்கு தோ்தல் பொறுப்பாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.
இதுதொடா்பாக தென்காசி வடக்கு மாவட்டச் செயலா் ஈ.ராஜா எம்எல்ஏ வெளியிட்டுள்ள அறிக்கை: தென்காசி வடக்கு மாவட்டம் சங்கரன்கோவில், வாசுதேவநல்லூா் தொகுதிகளுக்கு கட்சித் தலைமையில் இருந்து சங்கரன்கோவில் பொறுப்பாளராக ராமஜெயம், வாசுதேவநல்லூா் பொறுப்பாளராக தனுஷ் குமாா் எம்.பி. ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளனா்.
இவா்களுடன் இணைந்து பணியாற்றும் வகையில் இரு தொகுதிகளுக்கும் திமுக நிா்வாகிகளும் தோ்தல் பொறுப்பாளா்களாக நியமிக்கப்பட்டுள்ளனா்.
கட்சி நிா்வாகிகள் அனைவரும் தோ்தல் பொறுப்பாளா்களுடன் இணைந்து இரு தொகுதிகளில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற பணியாற்ற வேண்டும் என்றாா்
