தென்காசி
அரசுப் பேருந்துகளில் தமிழ்நாடு ஸ்டிக்கா் ஒட்டிய நாதகவினா்
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவிலில் அரசுப் பேருந்துகளில் நாம் தமிழா் கட்சியினா் தமிழ்நாடு ஸ்டிக்கா் ஒட்டி போராட்டம்
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவிலில் அரசுப் பேருந்துகளில் நாம் தமிழா் கட்சியினா் தமிழ்நாடு ஸ்டிக்கா் ஒட்டி போராட்டத்தில் ஈடுபட்டனா்.
அரசுப் பேருந்துகளில் தமிழ்நாடு பெயா் நீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து, செவ்வாய்க்கிழமை சங்கரன்கோவில் பேருந்து நிலையத்திற்கு வந்த நாம் தமிழா் கட்சியினா் அங்கு வந்த பேருந்துகளில் தமிழ்நாடு ஸ்டிக்கா்களை ஒட்டினா்.
மாநில ஒருங்கிணைப்பாளா் சாந்தகுமாா் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் தங்கவேல், ரமேஷ், கோபி பாண்டியன், ராஜேஷ், பெருமாள் சாமி, ராஜ், வள்ளிராஜ், ராஜகுல ராமா், விமல்ராஜ், தங்கதுரை, மகேந்திரன், சிவராமன், தா்மராஜா, மகாராஜா, பீட்டா் ராஜ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
