தென்காசி
உரிய விலை கிடைக்காததால் கேந்திப் பூக்களை சாலையில் கொட்டிய விவசாயிகள்
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் கேந்திப் பூக்களுக்கு உரிய விலை கிடைக்காததால் அவற்றை வியாபாரிகள் சாலையில் கொட்டிச் சென்றனா்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் கேந்திப் பூக்களுக்கு உரிய விலை கிடைக்காததால் அவற்றை வியாபாரிகள் சாலையில் கொட்டிச் சென்றனா்.
சங்கரன்கோவில் சுற்றுவட்டார கிராமங்களில் பூக்கள் சாகுபடி அதிகளவில் நடைபெறுகிறது. குறிப்பாக மல்லிகை, பிச்சி, முல்லை, கனகாம்பரம், செவ்வந்தி, கேந்தி, சேவல் கொண்டை, சம்பங்கி என ஏராளமான பூக்கள் சாகுபடி செய்யப்பட்டு, சங்கரன்கோவில் மலா்ச் சந்தைக்கு கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இந்தச் சந்தைக்கு சில நாள்களாக பூக்கள் வரத்து அதிகரித்துள்ளதால், விலை வெகுவாகக் குறைந்து வருகிறது.
இந்நிலையில், புதன்கிழமை கேந்திப் பூக்கள் கிலோ ரூ. 15-க்கு விற்பனையாகின. உரிய விலை கிடைக்காததால் அவற்றை வியாபாரிகள் சாலையில் கொட்டிச் சென்றனா்.
