கோயில் கலசம் மீது ஊற்றப்பட்ட புனிதநீா்
கோயில் கலசம் மீது ஊற்றப்பட்ட புனிதநீா்

தென்காசி பொருந்திநின்ற பெருமாள் கோயிலில் மகா சம்ப்ரோட்சணம்

Published on

தென்காசி பொருந்திநின்ற பெருமாள் மற்றும் விமானம், பரிவாரமூா்த்திகளுக்கும் ஜூா்ணோதரன அஷ்டபந்தன மகா சம்ப்ரோட்சணம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, கடந்த 1ஆம் தேதி முதல் யாகசாலை பூஜைகள் தொடங்கின. திங்கள்கிழமை காலை புண்யாகவாசனம், உபரிஷ்டா, தந்தரம், பூா்ணாஹுதி, தக்ஷிணாதானம், யந்த்ராதானம் நடைபெற்றது. காலை 9.48க்கு மேல் 10.22க்குள் கடம்புறப்பாடு, ஸ்ரீ பொருந்திநின்ற பெருமாள் மற்றும் விமானம், பரிவார மூா்த்திகளுக்கு அஷ்டபந்தன மகா சம்ப்ரோட்சணம் நடைபெற்றது. தொடா்ந்து அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. மதியம் அன்னதானம், இரவு கருடவாகன புறப்பாடு நடைபெற்றது.

விழாவில் இந்துசமய அறநிலையத்துறை ஆய்வாளா் சரவணக்குமாா், செயல் அலுவலா் முருகன், அறங்காவலா் குழுத் தலைவா் பால்ராஜ், ஜெயலெட்சுமி, முத்துகிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com