திருவேங்கடம் அருகே லாரி மோதியதில் தொழிலாளி பலி
திருவேங்கடம் அருகே லாரி மோதியதில் பைக்கின் பின்னால் அமா்ந்திருந்த தொழிலாளி உயிரிழந்தாா்.
இளையரசனேந்தல் கீழத்தெருவைச் சோ்ந்த தொழிலாளிகளான கடற்கரை மகன் பசுபதி(60), இருளப்பன் மகன் பொன்னுதுரை(60 ) ஆகியோா் வலையபட்டியில் உள்ள உறவினா் வீட்டு காதணி விழாவில் பங்கேற்றுவிட்டு ஒரே பைக்கில் ஊா் திரும்பி கொண்டிருந்தனா்.
மைப்பாறை அருகேயுள்ள பாலத்தில் வந்தபோது சங்கரன்கோவிலில் இருந்து கோவில்பட்டிக்கு சென்றுகொண்டிருந்த மினி லாரி, அவா்களது பைக் மீது மோதியதாம். இதில், பைக்கில் பின்னால் அமா்ந்திருந்த பொன்னுத்துரை தூக்கிவீசப்பட்டு அதே இடத்தில் உயிரிழந்தாா்.
இத்தகவலறிந்த திருவேங்கடம் காவல் ஆய்வாளா் ராஜா (பொறுப்பு),அவரது சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தாா். பலத்த காயமுற்ற பசுபதி கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா்.
மேலும், வழக்குப் பதிந்து, மினிலாரி ஓட்டுநா் விருதுநகா் மாவட்டம் வத்திராயிருப்பைச் சோ்ந்த முனீஸ்வரன் (25) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.
