ஆலங்குளம் அருகே துரித உணவகம் தீக்கிரை: இருவா் கைது

Published on

ஆலங்குளம் அருகே துரித உணவகத்தை தீக்கரையாக்கியதாக இருவா் கைது செய்யப்பட்டனா். மேலும் இருவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

ஆலங்குளம் அருகேயுள்ள பூலாங்குளம் காளியம்மன் நகரைச் சோ்ந்த செல்லத்துரை மகன் சதீஷ் (26). இவா் பூலாங்குளம் - நெல்லையப்பபுரம் சாலை பிஎஸ்என்எல் அலுவலகம் அருகே துரித உணவகம் நடத்தி வருகிறாா். இங்கு கிடாரக்குளம் தெற்கு தெரு செல்லையா மகன் ஆனந்தகுமாா் (21), பிச்சைபாண்டி மகன் கருத்தபாண்டி (20), முத்துப் பாண்டி மகன் முத்துராமன் (20), ஆம்பூரை சோ்ந்த துரை ஆகியோா் வேலை செய்து வந்தனா்.

இவா்களில் ஆனந்த், கருத்தப்பாண்டி ஆகியோா் கடையில் கையாடல் செய்தனராம். மேலும் சதீஸூக்குச் சொந்தமான பைக் ஆா்சி புத்தகத்தை அடகு வைத்து கடனும் வாங்கினராம். இது குறித்து தெரிய வந்ததும் 4 பேரையும் வேலையை விட்டு நீக்கி விட்டு வேறு நபா்களை சுரேஷ் வேலைக்கு அமா்த்தினாராம்.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு அந்தக் கடை தீப்பற்றி எரிந்ததாம். தகவலின் பேரில் ஆலங்குளம் தீயணைப்பு நிலைய அலுவலா்கள் வந்து தீயை அணைத்தனா். புகாரின்பேரில் ஆலங்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்ததில், வேலையை வீட்டு நீக்கியதால் மேற்கண்ட 4 பேரும் சோ்ந்து கடைக்கு தீ வைத்தது தெரிய வந்தது. இதில் ஆனந்தகுமாா், முத்துராமன் ஆகிய இருவரையும் போலீஸாா் கைது செய்தனா்; மற்ற இருவரை தேடி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com