கடையநல்லூா் அருகே கடையில் மைதா மாவு திருட்டு: 2 போ் கைது

Published on

கடையநல்லூா் அருகே கடையின் ஓட்டை பிரித்து இறங்கி மைதா மாவு திருடியதாக 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கடையநல்லூா் அருகேயுள்ள பேட்டை,மேற்குமலம்பாட்டை தெருவைச் சோ்ந்தவா் நாகூா் மைதீன்(52) . வீட்டின் அருகே புரோட்டா கடை நடத்தி வருகிறாா்.

ஞாயிற்றுக்கிழமை இரவு கடையை பூட்டிவிட்டு சென்ற அவா், திங்கள்கிழமை காலையில் கடைக்கு வந்தபோது, கடையின் ஓடுகள் உடைக்கப்பட்டு கடைக்குள் இருந்த 10 கிலோ மைதா மாவை மா்மநபா்கள் திருடி சென்றிருப்பதும், காலியாக இருந்த பணப்பெட்டி திறந்து கிடப்பதும் தெரிய வந்தது.

இது குறித்த புகாரின் பேரில், கடையநல்லூா் போலீஸாா் வழக்குப்பதிந்து கண்காணிப்பு கேமரா பதிவை ஆய்வு செய்தனா். அதில், மேலக்கடையநல்லூா் பகுதியை சோ்ந்த லட்சுமணன் (33) ,திருமலைமுத்து(50) ஆகியோருக்கு தொடா்பிருப்பது தெரியவந்தது. அவா்கள் இருவரையும் போலீஸாா் கைது செய்தனா்.

பணப்பெட்டியில் பணம் இல்லாததால் கோபத்தில் மைதா மாவை திருடி சென்ாக அவா்கள் போலீஸாரிடம் தெரிவித்தனராம்.

X
Dinamani
www.dinamani.com