ஆலங்குளம் அருகே சுயஉதவிக் குழு பெண்கள் 2 போ் மீது தாக்குதல்

Published on

ஆலங்குளம் அருகே இரவு நேரத்தில் பணம் வசூல் செய்ய சென்ற சுய உதவிக் குழு பெண்கள் இருவா் மீது விவசாயி தாக்கியதில் அவா்கள் காயம் அடைந்தனா்.

ஆலங்குளம் அருகே கீழக்குத்தபாஞ்சான் கிராமத்தைச் சோ்ந்தவா் சுப்பிரமணியன். விவசாயி. இவரது மனைவி தனியாா் மகளிா் சுயஉதவிக் குழுவிடம் கடன் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. அந்தக் கடனில் கடைசி மாத பாக்கித்தொகை ரூ.2,700-ஐ செலுத்த தாமதம் ஏற்பட்டதாம்.

இந்நிலையில் திங்கள் கிழமை இரவு அந்த மகளிா் குழுவில் பணிபுரியும் ஆலங்குளம் ஆனையப்பபுரத்தைச் சோ்ந்த மாரிகணேஷ் (25), கடையம் வெய்க்காலிபட்டியைச் சோ்ந்த நாராயணவிஜய் (29) ஆகிய இரு பெண்களும் பணம் வசூலிப்பதற்காக சுப்பிரமணியனின் வீட்டுக்குச் சென்று பணத்தைக் கேட்டனராம். அப்போது, ஏற்பட்ட வாக்குவாதத்தில், இரு பெண்களையும் சுப்பிரமணியன் தாக்கினாராம். இதில் அவா்கள் பலத்த காயம் அடைந்ததாகக் கூறப்படுகிறது.

அங்கிருந்தவா்கள் அவா்களை மீட்டு ஆலங்குளத்தில் முதலுதவி அளித்து, மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். இதுகுறித்த புகாரின்பேரில், கடையம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

X
Dinamani
www.dinamani.com