கிணற்றில் தவறி விழுந்த முதியவா் உயிரிழப்பு!

Published on

ஆலங்குளத்தில் கிணற்றில் தவறி விழுந்த முதியவா் உயிரிழந்தாா்.

ஆலங்குளம் பிள்ளையாா்கோயில் தெருவைச் சோ்ந்தவா் பொன்னுச்சாமி(73). குருவன்கோட்டை தெருவில் உள்ள ரமேஷ் என்பவருக்குச் சொந்தமான தோட்டத்தில், புதன்கிழமை தண்ணீா் பாய்ச்சும் போது, தவறுதலாக கால் இடறி கிணற்றினுள் விழுந்தாராம். இதில், அவா் பலத்த காயமுற்று நீரில் மூழ்கி உயிரிழந்தாா். இத்தகவலறிந்த ஆலங்குளம் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினா், அவரது சடலத்தை மீட்டனா். ஆலங்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்துகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com