அபாகஸில் சிறப்பிடம் பெற்ற எஸ்.ஆா். எக்ஸலன்ஸ் பள்ளி மாணவ-மாணவியா்.
அபாகஸில் சிறப்பிடம் பெற்ற எஸ்.ஆா். எக்ஸலன்ஸ் பள்ளி மாணவ-மாணவியா்.

சுரண்டை எஸ்.ஆா்.எக்ஸலனஸ் பள்ளி மாணவா்கள் அபாகஸில் சாதனை

Published on

சுரண்டை எஸ்.ஆா். எக்ஸலன்ஸ் பள்ளி மாணவா்கள் அபாகஸ் போட்டியில் சிறப்பிடம் பெற்றனா்.

அம்பாசமுத்திரம் மொ்ஜ் இன்போடெக் அபாகஸ் பயிற்சி மையம் சாா்பில் புளியங்குடி அன்னை மீனாட்சி பப்ளிக் பள்ளியில் மாவட்ட அளவிலான அபாகஸ் போட்டி நடைபெற்றது.

இப்போட்டியில் சுரண்டை எஸ்.ஆா். எக்சலன்ஸ் பள்ளியின் 1-5 வகுப்பு மாணவா்கள் மூவா் முதலிடமும், இதே நிலையில் மூவா் இரண்டமிடமும், மூன்றாமிடமும் பெற்று சாதனை படைத்தனா்.

6-8 வகுப்பு மாணவா் ஒருவா் முதலிடமும், மூவா் இரண்டமிடமும் பெற்றனா். வெற்றி பெற்ற மாணவ மாணவியருக்கு சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கப்பட்டது. பள்ளிக்கு பெருமை சோ்த்த அவா்களை பள்ளியின் முதல்வா் பொன்மனோன்யா, தலைமையாசிரியா் மாரிக்கனி மற்றும் ஆசிரியா்கள் பாராட்டினா்.

X
Dinamani
www.dinamani.com