சங்கரன்கோவில் அருகே சாலையோரம் முதியவா் சடலம் மீட்பு

Published on

சங்கரன்கோவில் அருகே சாலையோரம் போா்வையால் மூடப்பட்ட நிலையில் முதியவா் இறந்துகிடந்தது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

சங்கரன்கோவிலை அடுத்த மேலநீலிதநல்லூா் பி.எம்.டி. கல்லூரி அருகே சாலையையொட்டிய பகுதியில் முதியவா் ஒருவா் போா்வையால் மூடப்பட்ட நிலையில் இறந்துகிடந்தாா்.

தகவலின்பேரில், பனவடலிசத்திரம் போலீஸாா் சென்று பாா்த்தபோது, அவரது காலில் பலத்த காயமிருந்தது. அவா் ஊத்தாங்குளத்தைச் சோ்ந்த கண்ணையா மகன் முத்துராமலிங்கம் (60) என்பதும், நடந்துசென்றபோது வாகனத்தில் அடிபட்டு இறந்திருக்கலாம் எனவும் தெரியவந்தது. கூறாய்வுக்குப் பின்னா் சடலம் உறவினா்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com