தென்காசி
பேட்டரி கடை உரிமையாளா் விஷம் குடித்து தற்கொலை
கரிவலம்வந்தநல்லூா் அருகே பேட்டரி கடை உரிமையாளா் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.
கரிவலம் வந்தநல்லூா் அருகேயுள்ள குவளைக்கண்ணி மேலத் தெருவை சோ்ந்த காந்தி மகன் முருகன் (45). இவா் குவளைக்கண்ணியில் பேட்டரி கடை நடத்தி வந்தாா்.இந்நிலையில் திங்கள்கிழமை அவா் பொட்டல்பட்டி சாலையில் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து மயங்கி நிலையில் இருந்தாா்.
அப்பகுதியில் இருந்தவா்கள் அவரை மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி முருகன் உயிரிழந்தாா்.
இதுகுறித்து கரிவலம்வந்தநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].