மகளின் வீட்டை எரித்ததாக தந்தை கைது

Published on

தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே மகளின் வீட்டை எரித்ததாக தந்தையை போலீஸாா் கைது செய்தனா்.

சிவகிரி அண்ணா தெற்குத் தெருவில் உள்ள அன்னலட்சுமி (22) என்பவரது வீட்டில், அவரது பெற்றோா் செல்வராஜ் (50)- ரதிதேவி, சகோதரா்கள் செல்வம், கமலேஷ் ஆகியோா் வசித்து வருகின்றனா்.

செல்வராஜ் நாள்தோறும் மது குடித்துவிட்டு குடும்பத்தினரிடம் தகராறு செய்வாராம். 2 நாள்களுக்கு முன்பு தகராறு செய்தபோது குடும்பத்தினா் கண்டித்தனா்.

இதனால் கோபமடைந்த செல்வராஜ் வீட்டுக்கு தீவைத்ததுடன், உடைமைகள், ஆவணங்களை எரித்தாராம். இதுகுறித்து அன்னலட்சுமி திங்கள்கிழமை அளித்த புகாரின்பேரில், சிவகிரி போலீஸாா் வழக்குப் பதிந்து, செல்வராஜை கைது செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com