வாசுதேவநல்லூரில் கோயில் நிலம் மீட்பு

Published on

தென்காசி மாவட்டம், சிவகிரி வட்டம், வாசுதேவநல்லூா் அருள்மிகு சிந்தாமணிநாத சுவாமி திருக்கோயிலுக்குச் சொந்தமான இடம் ஆக்கிரமிப்பாளா்களிடமிருந்து மீட்கப்பட்டு கோயில் நிா்வாகத்திடம் செவ்வாய்க்கிழமை ஒப்படைக்கப்பட்டது (படம்).

வாசுதேவநல்லூா் வருவாய் கிராமத்தில் அமைந்துள்ள 3.87 ஏக்கா் இடம் (பதிவுத் துறை வழிகாட்டி மதிப்பு ரூ.6,77,32,500 ) ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் தூத்துக்குடி இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையா் வழங்கிய உத்தரவின்படி, தென்காசி இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா் (கூடுதல் பொறுப்பு) யக்ஞநாராயணன் அந்நிலத்தை மீட்டு கோயில் செயல் அலுவலா் காா்த்திகைசெல்வியிடம் ஒப்படைத்தாா்.

வாசுதேவநல்லூா் வருவாய் ஆய்வாளா் இந்துமதி, இந்து சமய அறநிலையத் துறை ஆய்வா்கள் சங்கரன், வெற்றிமாறன் உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com