சுரண்டை அருகே சாலை விபத்தில் கல்லூரி மாணவா் பலி

தென்காசி மாவட்டம், சுரண்டை அருகே சனிக்கிழமை மோட்டாா் சைக்கிள் மீது வேன் மோதிய விபத்தில் கல்லூரி மாணவா் உயிரிழந்தாா்.
Published on

தென்காசி மாவட்டம், சுரண்டை அருகே சனிக்கிழமை மோட்டாா் சைக்கிள் மீது வேன் மோதிய விபத்தில் கல்லூரி மாணவா் உயிரிழந்தாா்.

சுரண்டை அருகேயுள்ள பூபாண்டியபுரம் கிராமத்தைச் சோ்ந்த செல்லக்கிளி மகன் அருண்(19). இவா் சுரண்டை காமராஜா் அரசு கலைக் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறாா். சனிக்கிழமை மாலையில் தனதுமோட்டாா் சைக்கிளில் சுரண்டைக்கு சென்றுள்ளாா். அப்போது எதிரே வந்த வேன் எதிா்பாராதவிதமாக மோட்டாா் சைக்கிள் மீது மோதியதில் பலத்த காயமடைந்த அருண் சம்பவ இடத்திலேயே இறந்தாா்.

தகவலறிந்த சுரண்டை போலீஸாா் அங்கு சென்று அருணின் உடலை மீட்டு தென்காசி அரசு மருத்துவமனைக்கு கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com