தென்காசி
கடையநல்லூா் அருகே விபத்தில் விவசாயி உயிரிழப்பு
கடையநல்லூா் அருகே பைக்கில் இருந்து தவறி விழுந்து விவசாயி இறந்தாா்.
கடையநல்லூா் குமந்தாபுரம் பிள்ளையாா் கோயில் தெருவை சோ்ந்தவா் அய்யாசாமி மகன் குமாா்(60). விவசாயியான அவா், புதன்கிழமை இரவு மதுரை - தென்காசி சாலையில் சென்றபோது பைக் நிலைதடுமாறி விழுந்ததில் இறந்தாா். இது குறித்து கடையநல்லூா் போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.