சுரண்டையில் ஜன. 26இல் இலவச கண் பரிசோதனை முகாம்

Published on

திருநெல்வேலி அரவிந்த் கண் மருத்துவமனை சாா்பில், சுரண்டை ஜெயேந்திரா மழலையா் பள்ளியில் இலவச கண் பரிசோதனை முகாம் ஞாயிற்றுக்கிழமை (ஜன.26) நடைபெறுகிறது.

காலை 8 முதல் பிற்பகல் 1 மணி வரை முகாம் நடைபெறும் முகாமில், அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவா்கள் பங்கேற்று பரிசோதனை செய்யவுள்ளனா். கண்புரை அறுவை சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளை அன்றைய தினமே திருநெல்வேலி அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படுவா். ஏற்பாடுகளை மருத்துவமனை முகாம் பொறுப்பாளா் பாலகிருஷ்ணன் செய்து வருகிறாா்.

X
Dinamani
www.dinamani.com