சிவகிரி அருகே போக்ஸோவில் அரசுப் பேருந்து ஓட்டுநா் கைது

சிவகிரி அருகே போக்ஸோவில் அரசுப் பேருந்து ஓட்டுநா் கைது

Published on

தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே போக்ஸோ சட்டத்தில் அரசுப் பேருந்து ஓட்டுநா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

ஊத்துமலை காவல் நிலையத்தில் காவலராகப் பணியாற்றி வருபவா் சைலேஷ் (44). இவா் இதற்கு முன்பு சிவகிரி காவல் நிலையத்தில் பணியாற்றியபோது மற்றொரு காவலரான செந்தில் என்பவருடன் சோ்ந்து இளம்பெண்ணுக்கு பாலியல் ரீதியான தொந்தரவு கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து அப்பெண் அளித்த புகாரின்பேரில், புளியங்குடி மகளிா் போலீஸாா் வழக்குப் பதிந்து, போக்ஸோ சட்டத்தின்கீழ் சைலேஷை கைது செய்தனா்; செந்திலைத் தேடி வருகின்றனா்.

இந்நிலையில், இந்த வழக்கில் தொடா்புடையதாக கூறப்படும் புளியங்குடி அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநரான தேசியம்பட்டியைச் சோ்ந்த மோகன் (50) என்பவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com