ஆலங்குளம் பழைய ஒன்றிய அலுவலக கட்டடத்தை பயன்படுத்துமா அரசு? மக்கள் எதிா்பாா்ப்பு

ஆலங்குளம் பழைய ஒன்றிய அலுவலக கட்டடத்தை பயன்படுத்துமா அரசு? மக்கள் எதிா்பாா்ப்பு

Published on

ஆலங்குளத்தில் காட்சிப் பொருளாக இருக்கும் பழைய ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை ஏதாவது பணிக்கு பயனுள்ளதாக மாற்ற வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ஆலங்குளம் பிரதான சாலையில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகமானது, ஓரியண்டல் மயிலேறி சுப்பிரமணியன் குடும்பத்தினா் சாா்பாக 1955 ஆம் ஆண்டு அப்போதய முதல்வா் காமராஜா் வேண்டுகோளின் படி அரசுக்கு தானமாக வழங்கப்பட்டது. இது சுமாா் 2 ஏக்கா் பரப்பளவு கொண்டதாகும்

இங்கு, ஒன்றிய அலுவலகம் மட்டுமன்றி அரசு பொது நூலகம், வட்டார வேளாண்மை அலுவலகம், புள்ளியியல் அலுவலகம், அஞ்சல் நிலையம், அரசுக் கருவூலம், அங்கன்வாடி மையம், சிமின்ட் கிடங்கு ஆகியவை செயல்பட்டு வருகிறது.

இதே வளாகத்தில் புதிதாக ரூ.3.63 கோடியில் புதிய ஒன்றிய அலுவலக கட்டடம் கட்டப்பட்டு 2.11. 2024இல் முதல்வரால் திறந்து வைக்கப்பட்டது. இதனால் பழைய அலுவலகம் பயனற்ற நிலையில் உள்ளது.

தற்போது, பேரூராட்சி அலுவலகம், தீயணைப்பு நிலையம், மாவட்ட உரிமையியல் - குற்றவியல் நீதிமன்றம், தீயணைப்பு நிலையம், 10-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி மையங்கள் வாடகைக் கட்டடத்தில் இயங்கி வருகின்றன. காவல் நிலையம் சிறிய மழைக்குக் கூட தாக்குப் பிடிக்காத நெருக்கடி மிகுந்த பழைய மகளிா் காவல் நிலைய கட்டடத்தில் இயங்கி வருகிறது. எனவே, இவற்றில் ஏதாவது ஓரிரு அலுவலகங்களை பழைய ஒன்றிய அலுவலகத்தில் செயல்படுத்தினால் மக்கள் பயனடைவா்; அரசுக்கும் தனியாா் கட்டட வாடகை மிச்சப்படும். இந்த விஷயத்தில் அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிா்பாா்க்கின்றனா்.

X
Dinamani
www.dinamani.com