தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே 12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக பாஜக பிரமுகா் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டாா்.
ஆலங்குளம் அருகேயுள்ள கடங்கனேரி கிராமத்தைச் சோ்ந்தவா் பேச்சிமுத்து(55). ஆலங்குளம் ஒன்றிய பாஜக விவசாய அணி முன்னாள் தலைவரான இவா், வட்டித் தொழில் செய்து வருகிறாா்.
அதே கிராமத்தைச் சோ்ந்த ஒருவா் வீட்டிற்கு வட்டி வசூலிக்குச் சென்றபோது அங்கிருந்த 12 வயது சிறுமியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டாராம். சிறுமி கூச்சலிட்டதால் அக்கம் பக்கத்தினா் வந்து சிறுமியை மீட்டனா்.
மேலும் பேச்சிமுத்துவை வீட்டில் உள்ளேயே வைத்து பூட்டி போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். ஆலங்குளம் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் வந்து, அவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.