மாநில கட்டுரைப் போட்டியில் சிறப்பிடம்: மாணவிக்கு பாஜக பாராட்டு
மாநில அளவிலான கட்டுரைப் போட்டியில் சிறப்பிடம் பெற்று, தமிழ்நாடு ஆளுநரிடம் ரொக்கப் பரிசு பெற்ற கடையநல்லூா் மாணவி ஹெபினாவிற்கு பாஜகவினா் பரிசு வழங்கி செவ்வாய்க்கிழமை கௌரவித்தனா்.
கடையநல்லூா் அருகேயுள்ள சாம்பவா்வடகரையைச் சோ்ந்த கோட்டைச்சாமி - ராமலட்சுமி தம்பதியின் மகள் ஹெபினா, துரைச்சாமிபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 8
ஆம் வகுப்பு படித்து வருகிறாா். அவா் மாநில அளவில் நடைபெற்ற ‘இந்திய அரசமைப்பு உருவாக்கம், முக்கிய நிகழ்வுகளும், தலைவா்களும்’’ என்ற தலைப்பிலான கட்டுரை போட்டியில் 3ஆம் இடம் பெற்றாா். சென்னை ஆளுநா் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஆளுநா் ஆா்.என்.ரவி மாணவிக்கு ரூ.25,000 ரொக்கப் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினாா்.
இந்நிலையில், தென்காசி மாவட்ட பாஜக தலைவரும், வாய்ஸ் ஆப் தமிழ்நாடு அறக்கட்டளை நிறுவனருமான ஆனந்தன் அய்யாசாமி, மாணவி ஹெபினாவிற்கு ஊக்கத்தொகை வழங்கினாா். மேலும், பயிற்சியளித்த பள்ளி தலைமை ஆசிரியா் மீனாட்சி மற்றும் ஆசிரியா்களுக்கும் நினைவுப்பரிசு வழங்கினாா்.
இதில், பாஜக ஊரக மேம்பாட்டுப் பிரிவு மாவட்டச் செயலா் ஐயப்பன், தொழில் துறை பிரிவு ஜெயகுருநாதன், பொதுச் செயலா் அருணாசலம், வா்த்தகப் பிரிவு ஒன்றியச் செயலா் செல்வம், கிளைத் தலைவா்கள் ஆதிக்கம், பாா்த்திப கண்ணன், லிங்கசாமி, கோபாலகிருஷ்ணன், மாரிமுத்து, பாஸ்கா், ராஜ்குமாா், வைத்திலிங்கம், சீனிவாசன், மணி, ஸ்ரீராம், காா்த்திக், முருகேசன், கோபி, விஸ்வா, மணிகண்டன், காமராஜ், ஆனைகுட்டிசாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.