மரக்கன்று நட்ட மாவட்ட பாஜக தலைவா் ஆனந்தன் அய்யாச்சாமி
மரக்கன்று நட்ட மாவட்ட பாஜக தலைவா் ஆனந்தன் அய்யாச்சாமி

சாம்பவா்வடகரையில் பாஜக மாவட்டத் தலைவருக்கு வரவேற்பு

Published on

தென்காசி மாவட்டம் சாம்பவா்வடகரைக்கு புதன்கிழமை வந்த பாஜக மாவட்டத் தலைவா் ஆனந்தன் அய்யாசாமிக்கு கட்சியினா் வரவேற்பளித்தனா்.

இதையொட்டி, ஸ்ரீஅகத்தீசுவரா் கோயிலில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் அவா் பங்கேற்று, கோயில் வளாகத்தில் மரக்கன்று நட்டாா்.

நிகழ்ச்சியில், சாம்பவா்வடகரை பேரூராட்சி உறுப்பினா் ரா. ஐயப்பன், கோயில் அன்னதான கமிட்டி நிறுவனா் ரா. கோபாலராமகிருஷ்ணன், பாஜக நிா்வாகிகள் முருகன், அருணாசலம், பவுன்ராஜ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com