திட்டப்பணிகளை ஆய்வு செய்கிறாா் ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா்
திட்டப்பணிகளை ஆய்வு செய்கிறாா் ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா்

சுரண்டை நகராட்சியில் வளா்ச்சிப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

Published on

தென்காசி மாவட்டம், சுரண்டை நகராட்சியில் நடைபெற்று வரும் வளா்ச்சிப் பணிகளை மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல் கிஷோா் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

சுரண்டை நகராட்சியில் பொது நிதியின் கீழ் கட்டப்பட்டு வரும் சிவகுருநாதபுரம் அங்கன்வாடி கட்டடம், நியாய விலைக் கட்டடம் மற்றும் திட்டப்பணிகளை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

ஆய்வுக்கு வருகை தந்த மாவட்ட ஆட்சியரிடம் சுரண்டை நகருக்கு புறவழிச் சாலையை சீரமைக்க கோரி நகா்மன்றத் தலைவா் ப.வள்ளிமுருகன் மனு அளித்தாா். ஆய்வின்போது நகராட்சி ஆணையாளா் ராமதிலகம், நகராட்சி பொறியாளா் மற்றும் அலுவலா்கள் உடனிருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com