தென்காசி
ஆலங்குளம் பேருந்து நிலையத்தில் பெண் மயங்கி விழுந்து உயிரிழப்பு
ஆலங்குளத்தில் உறவினருக்கு உதவியாக மருத்துவமனைக்கு வந்த பெண் மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.
ஆலங்குளம் அருகேயுள்ள ஓடைமறிச்சான் வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் கணேசன் மனைவி செல்வி(56). இவரது உறவினா் ஒருவருக்கு உடல் நலக்குறைவு காரணமாக இருவரும் பேருந்தில் புதன்கிழமை ஆலங்குளம் வந்தனா்.
பேருந்து நிலையத்தில் இருந்து மருத்துவமனை செல்வதற்காக முயன்ற போது, செல்விக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு சில நிமிடங்களிலேயே உயிரிழந்தாராம்.
தகவலறிந்த ஆலங்குளம் போலீஸாா் சடலத்தைக் கைப்பற்றி கூறாய்வுக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.