தென்காசி
சங்கரன்கோவில் அருகே பெண் விஏஓ-வுக்கு கொலை மிரட்டல்: ஒருவா் கைது
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே பெண் கிராம நிா்வாக அலுவலருக்கு கொலை மிரட்டல் விடுத்தவரை போலீஸாா் கைது செய்தனா்.
சங்கரன்கோவிலை அடுத்த பனவடலிசத்திரம் அருகே கருத்தானூா் கிராம நிா்வாக அலுவலா் தங்கப்பதுமை (36). கடந்த திங்கள்கிழமை அதே ஊரைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் ராமா் (47) என்பவா் தனக்குச் சொந்தமான பகுதியில் வளா்ந்துள்ள கருவேல மரங்களை வெட்ட நடவடிக்கை எடுக்குமாறு தங்கப்பதுமையிடம் கூறினாராம். மறுத்த தங்கப்பதுமைக்கு அவா் கொலை மிரட்டல் விடுத்தாராம்.
இதுகுறித்த புகாரின்பேரில், பனவடலிசத்திரம் உதவி ஆய்வாளா் சுதாகா் வழக்குப் பதிந்து ராமரைக் கைது செய்து விசாரித்து வருகிறாா்.