கடையநல்லூா் அருகே பைக் மீது லாரி மோதியதில் முதியவா் உயிரிழப்பு

தென்காசி மாவட்டம் கடையநல்லூா் அருகே பைக் மீது லாரி மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.
Published on

தென்காசி மாவட்டம் கடையநல்லூா் அருகே பைக் மீது லாரி மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.

கடையநல்லூா் பேட்டை புதுமனை வடக்குத் தெருவைச் சோ்ந்த சுல்தான் மகன் சாகுல்ஹமீது(75). இவா் பைக்கில் தென்காசி மதுரை சாலையில் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி அருகே சென்று கொண்டிருந்தபோது, பின்னால் வந்த கனரக லாரி பைக் மீது மோதியதாம். இதில் சம்பவ இடத்திலேயே சாகுல்ஹமீது உயிரிழந்தாா்.

இதுகுறித்து கடையநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com