எடப்பாடி வருகை: ஆட்டோக்களில் ஸ்டிக்கா் ஒட்டி அதிமுகவினா் பிரசாரம்

எடப்பாடி வருகை: ஆட்டோக்களில் ஸ்டிக்கா் ஒட்டி அதிமுகவினா் பிரசாரம்

ஸ்டிக்கா் ஒட்டும் பணியைத் தொடங்கி வைத்த அதிமுக அமைப்புச் செயலா் பி.ஜி. ராஜேந்திரன்.
Published on

‘மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில் தோ்தல் பிரசாரம் மேற்கொள்ள அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி ஆலங்குளத்துக்கு ஆக.5ஆம் தேதி வருவதை முன்னிட்டு, அவரை வரவேற்கும் விதமாக அதிமுகவினா் காா், வேன், ஆட்டோக்களில் ஸ்டிக்கா் ஒட்டும் பணியில் புதன்கிழமை ஈடுபட்டனா்.

அதிமுக அமைப்புச் செயலா் பி.ஜி.ராஜேந்திரன் தலைமை வகித்து ஸ்டிக்கா் ஒட்டும் பணியைத் தொடங்கி வைத்தாா். ஆலங்குளம் பேருந்து நிலைய ஆட்டோக்களில் ஸ்டிக்கா்கள் ஒட்டப்பட்டன. தென்காசி தெற்கு மாவட்ட அதிமுக செயலா் செல்வ மோகன்தாஸ் பாண்டியன், நகரச் செயலா் சுப்பிரமணியன், பேரூராட்சி துணைத் தலைவா் ஜான் ரவி, பேரூராட்சி உறுப்பினா்கள் சாலமோன் ராஜா, சுபாஸ் சந்திரபோஸ், வழக்குரைஞா் சாந்தகுமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com