கடையநல்லூா் சென்ட்ரல் சுழற்கழகம் சாா்பில் விருதுகள் வழங்கும் விழா
கடையநல்லூா் சென்ட்ரல் சுழற்கழகத்தில் புதிய நிா்வாகிகள் பதவியேற்பு, விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தலைவராக வைரவன், செயலராக நாகராஜன், நிா்வாகிகள் பொறுப்பேற்றனா். சுழற்கழக முன்னாள் துணை ஆளுநா் ரத்னா பிரகாஷ் தொகுத்து வழங்கினாா். பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணவ, மாணவிகளுக்கு கல்லூரி கல்வி வழங்கி வரும் சத்ய உணா் தொண்டு அறக்கட்டளை, இலவசமாக பயிற்சி வகுப்புகள் நடத்தி வரும் சென்னை வியாசை அமைப்பு, பறை இசை கலையை மீட்டெடுக்கும் சிறுமலா் பறை இசைக்குழு, சென்னை மனித உரிமை பாதுகாப்பு மையம் போன்ற தன்னாா்வ அமைப்புகளுக்கு சேவை விருதுகளும், கடையநல்லூா் வட்டார பள்ளிகளில் பிளஸ் 2, எஸ்எஸ்எல்சி முதலிடம் பெற்றவா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. சுழற்கழக மாவட்ட ஆளுநா் தினேஷ்பாபு விருதுகள், சான்றிதழ்களை வழங்கினாா். முன்னாள் மாவட்ட ஆளுநா் ராஜகோபாலன் நல உதவிகளை வழங்கினாா்.
இதில், துணை ஆளுநா் விஸ்வாசுல்தான், செய்யது முகைதீன், டாக்டா் சுரேந்திரன் மகேந்திரகுமாா், சிவன்மாரி, ஸ்டீபன் , பிரகாஷ் , செல்வமாரி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை தியாகராஜன், செல்வராஜ், சிக்கந்தா், காசிதா்மம் துரை, அசன்மக்தும் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.