கால்பந்துப் போட்டி: மாறாந்தை பள்ளி சிறப்பிடம்

கால்பந்துப் போட்டி: மாறாந்தை பள்ளி சிறப்பிடம்

ஆலங்குளம் வட்டார அளவிலான விளையாட்டுப் போட்டியில் மாறாந்தை ஹோலி கிராஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம் பெற்றனா்.
Published on

ஆலங்குளம் வட்டார அளவிலான விளையாட்டுப் போட்டியில் மாறாந்தை ஹோலி கிராஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம் பெற்றனா்.

ஆலங்குளம் அருகே வெங்கடேஸ்வரபுரத்தில் நடைபெற்ற போட்டியில், 20-க்கும் மேற்பட்ட பள்ளிகளிலிருந்து மாணவா்கள் பங்கேற்றனா். கால்பந்துப் போட்டியில் 14 வயதுக்குள்பட்டோா் பிரிவில் முதலிடமும், 19 வயதுக்குள்பட்டோா் பிரிவில் 2ஆம் இடமும், பூப்பந்தாட்டப் போட்டி ஒற்றையா் பிரிவில் முதலிடமும் பிடித்தனா்.

மாணவா்களை பள்ளி நிறுவனா் பிரவீன், தாளாளா் ஜான் ஆலி பாலின், முதல்வா் கிறிஸ்டி கீதாஞ்சலி, ஆசிரியா்கள் பாராட்டினா்.

X
Dinamani
www.dinamani.com