தென்காசி
சதுரங்கப் போட்டி: ஹில்டன் பள்ளி சிறப்பிடம்
சிறப்பிடம் பெற்ற மாணவா்களுடன் பள்ளித் தாளாளா் ஆா்.ஜே.வி.பெல், ஆசிரியா்கள்.
தென்காசி மாவட்டம், குறுவட்ட அளவிலான சதுரங்கப் போட்டியில் பழைய குற்றாலம், ஹில்டன் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் சிறப்பிடம் பெற்றனா்.
தென்காசி இ.சி.ஈஸ்வரன்பிள்ளை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்தப் போட்டியில் பழைய குற்றாலம், ஹில்டன் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.
சப் ஜூனியா் பிரிவில் இ-ஜேக் அஸ்டில், எஸ். அனன்யா ஆகியோா் முதலிடமும், சீனியா் பிரிவில் எஸ். ஆா்.ராகவ் சங்கா் முதலிடமும், எம்.கதிா்வேல் மூன்றாமிடமும், சூப்பா் சீனியா் பிரிவில் டி. வேல்விழி முதலிடமும், எம்.கே.காா்த்திக் ராகுல் இரண்டாமிடமும் பெற்றனா். சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளை பள்ளித் தாளாளா் ஆா்.ஜே.வி. பெல், செயலா் கஸ்தூரி பெல், முதல்வா் மோன்சி கே.மத்தாயி, ஆசிரியா்கள் பாராட்டினா்.