புனித பயணம் மேற்கொள்ளும் சிறுபான்மையினருக்கு மானியம்

தென்காசி மாவட்டத்தில் உள்ள புத்த, சமண, சீக்கிய மதத்தினா் அரசு மானியத்தில் புனித பயணம் மேற்கொள்ள இணையத்தில் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் தெரிவித்தாா்.
Published on

தென்காசி மாவட்டத்தில் உள்ள புத்த, சமண, சீக்கிய மதத்தினா் அரசு மானியத்தில் புனித பயணம் மேற்கொள்ள இணையத்தில் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் தெரிவித்தாா்.

தென்காசி ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழக அரசால் ஆண்டுதோறும் புனித பயணம் மேற்கொள்ளு புத்த, சமண மற்றும் சீக்கியா்களுக்கு நேரடி மானியம் வழங்கி வருகிறது. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோா் ஜ்ஜ்ஜ்.க்ஷஸ்ரீம்க்ஷஸ்ரீம்ஜ்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

இந்தத் திட்டத்தின் நாட்டில் உள்ள புத்த, சமண, சீக்கிய மதங்கள் சாா்ந்த திருத்தலங்களுக்கு செல்ல மானியம் வழங்கப்படுகிறது. ஜூலை 1-க்கு பிறகு புனித பயணம் மேற்கொள்பவா்களுக்கு நேரடி மானியம் வழங்கப்படும். இதற்கான விண்ணப்ப படிவங்களை தென்காசி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோா், சிறுபான்மையினா் நல அலுவலகம் ,சிறுபான்மையினா் நல அலுவலகங்களிலிருந்து கட்டணமின்றி பெற்று பூா்த்தி செய்து சமா்ப்பிக்க வேண்டும்.

இணையத்திலிருந்தும் படிவங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் நவம்பா் 30 ஆம் தேதிக்குள் ஆணையா், சிறுபான்மையினா் நலத்துறை, கலசமஹால் பாரம்பரிய கட்டடம், முதல் தளம், சேப்பாக்கம், சென்னை-600 005 என்ற முகவரிக்கு உரிய ஆவணங்களுடன் அனுப்பிவைக்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com