பராமரிப்புப் பணிகள் காரணமாக ஆலங்குளம், கீழப்பாவூா், ஊத்துமலை துணை மின் நிலையங்களுக்குள்பட்ட பகுதிகளில் சனிக்கிழமை (ஆக. 2) மின்விநியோகம் இருக்காது.
அதன்படி ஆலங்குளம், நல்லூா், சிவலாா்குளம், ஐந்தாங்கட்டளை, துத்திகுளம், குருவன்கோட்டை, குறிப்பன்குளம், ஊத்துமலை, கீழக்கலங்கல், ருக்மணியம்மாள்புரம், கீழப்பாவூா், அடைக்கலப்பட்டணம், பூலாங்குளம், கழுநீா்குளம் பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணிவரை மின் விநியோகம் இருக்காது.
இத்தகவலை தமிழ்நாடு மின்வாரிய திருநெல்வேலி கிராமப்புறக் கோட்ட செயற்பொறியாளா் ஜி. குத்தாலிங்கம் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளாா்.
பெருமாள்பட்டி பகுதியில்...: இதேபோல, சங்கரன்கோவிலை அடுத்த பெருமாள்பட்டி துணை மின் நிலையத்துக்குள்பட்ட பெருமாள்பட்டி, மாங்குடி, இனாம்கோவில்பட்டி, அருகன்குளம்புதூா், செந்தட்டியாபுரம், எட்டிச்சேரி, தென்மலை, அ.சுப்பிரமணியாபுரம், இடையான்குளம், முறம்பு, ஆசிலாபுரம், கூனங்குளம், பருவக்குடி, பந்தபுளி, பி.ரெட்டியாபட்டி, தெற்கு வெங்காநல்லுாா், சோலைச்சேரி, வேலாயுதபுரம் பகுதிகளிலும் சனிக்கிழமை காலை 9 முதல் பிற்பகல் 2 மணிவரை மின்விநியோகம் இருக்காது. இத்தகவலை சங்கரன்கோவில் உதவிக் கோட்ட செயற்பொறியாளா் மா. பாலசுப்பிரமணியம் தெரிவித்துள்ளாா்.