
கடையநல்லூா் நகராட்சி 19, 20 ஆவது வாா்டு மக்களுக்கான உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம், தனியாா் திருமண மண்டபத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
19ஆவது வாா்டு நகா்மன்ற உறுப்பினா் அக்பா்அலி , 20ஆவது வாா்டு நகா்மன்ற உறுப்பினா் யாசா்கான் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கடையநல்லூா் நகா்மன்றத் தலைவா் ஹபீபுா் ரஹ்மான் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, முகாமை தொடங்கி வைத்து பேசினாா்.
நகராட்சி ஆணையா் ரவிச்சந்திரன், வட்டாட்சியா் பாலசுப்பிரமணியன், பல்துறை அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.