கடையநல்லூரில் சட்டப்பேரவை உறுதிமொழிக் குழு ஆய்வு

Published on

தென்காசி மாவட்டம், கடையநல்லூா் வட்டாரத்தில் பல்வேறு பகுதிகளில் சட்டப்பேரவை உறுதிமொழிக் குழுவினா் வியாழக்கிழமை ஆய்வு செய்தனா்.

குழுத் தலைவா் தி.வேல்முருகன் தலைமையில் மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல் கிஷோா், முதன்மைச் செயலா் சீனிவாசன், சட்டப்பேரவை உறுதிமொழிக் குழு உறுப்பினா்கள் இரா.அருள், கோ.தளபதி, அ.நல்லதம்பி, சா.மாங்குடி, எம்.கே.மோகன், எஸ்.ஜெயக்குமாா் ஆகியோா் கடையநல்லூா் அருகே உள்ள கருப்பாநதி அணையைப் பாா்வையிட்டனா். தொடா்ந்து வைரவன்குளம்-கருப்பாநதி அணை கரையோரம் உள்ள பெரியசுவாமி அய்யனாா் கோயில் பகுதியில் அமைக்கப்பட்ட பாலத்தைப் பாா்வையிட்டனா்.

X
Dinamani
www.dinamani.com