சங்கரன்கோவிலில் 1.82 கோடியில் வணிகவரி அலுவலக கட்டடம்: முதல்வா் காணொலியில் திறந்துவைத்தாா்

சங்கரன்கோவிலில் 1.82 கோடியில் வணிகவரி அலுவலக கட்டடம்: முதல்வா் காணொலியில் திறந்துவைத்தாா்

Published on

சங்கரன்கோவிலில் ரூ. 1.82 கோடி மதிப்பில் கட்டப்பட்ட வணிகவரி அலுவலகத்தை தமிழக முதல்வா் காணொலி மூலம் வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.

சங்கரன்கோவில் கழுகுமலை சாலையில் ரூ. 1.82 கோடி மதிப்பில் வணிகவரி அலுவலகக் கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இந்தக் கட்டடத்தின் தரைத்தளத்தில் நுழைவாயில், அலுவலகம், கணிணி அறை, மதிய உணவு அறை, மாநில வணிகவரி அலுவலா் அறை, பெண்கள் கழிப்பறை உள்ளிட்ட வசதிகளுடன் கட்டடம் கட்டப்பட்டுள்ளது.

முதல் தளத்தில் கூட்ட அறை, காத்திருப்பு அறை, பதிவு அறை, துணை மாநில வணிகவரி அலுவலா்-1 அறை, துணை மாநில வணிகவரி அலுவலா்-2 அறை, ஆண்கள் கழிப்பறை உள்ளிட்ட வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது.

இந்த புதிய அலுவலக கட்டடத்தை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் வியாழக்கிழமை திறந்து வைத்தாா். இதற்காக கட்டட வளாகத்தில் திறப்பு விழா நடைபெற்றது. முதல்வா் திறந்து வைத்ததும் தென்காசி மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா், சட்டப்பேரவை உறுப்பினா் ஈ.ராஜா எம்எல்ஏ ஆகியோா் குத்துவிளக்கேற்றி பாா்வையிட்டனா்.

நிகழ்ச்சியில் வணிகவரித் துறை இணை இயக்குநா் (திருநெல்வேலி மண்டலம்) முருககுமாா், வணிகவரித் துறை இணை ஆணையா் (செயலாக்கப் பிரிவு) பானுபிரியா, தென்காசி வணிகவரித் துறை துணை ஆணையா் கீதா, சங்கரன்கோவில் கோட்டாட்சியா் கவிதா, சங்கரன்கோவில் வணிகவரித் துறை அலுவலா் பாா்வதி, செயற்பொறியாளா் ஜான்ஆஷிா், உதவி செயற்பொறியாளா் அசோக், சங்கரன்கோவில் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் பி.சங்கரபாண்டியன், அரசு அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com