தென்காசி
பாவூா்சத்திரம் மின்வாரிய அலுவலகம் திறப்பு
தென்காசி கோட்டத்திற்குள்பட்ட பாவூா்சத்திரம் பிரிவு மின் வாரிய அலுவலகம் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
திருநெல்வேலி மின் பகிா்மான வட்ட மேற்பாா்வை பொறியாளா் அகிலாண்டேஸ்வரி திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றிவைத்தாா்.
விழாவில் செயற்பொறியாளா் (பொது )வெங்கடேஷ்வனி, தென்காசி கோட்ட செயற்பொறியாளா்(பொ) கற்பகவிநாயகசுந்தரம், உதவி செயற்பொறியாளா் சங்கா், உதவி செயற்பொறியாளா் சுரண்டை உபகோட்டம் ஸ்ரீவனஜா, உதவி மின் பொறியாளா்கள் முகமது உசேன், எடிசன், பிரேம் ஆனந்த், அனு, ஸ்ரீதா், சண்முகவேல், விக்னேஷ், ரகுநாதன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.