சொக்கம்பட்டி அருகே 43 கிலோ புகையிலை பொருள்கள் பறிமுதல்

Published on

தென்காசி மாவட்டம், சொக்கம்பட்டி அருகே 43 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

சொக்கம்பட்டி காவல் உதவி ஆய்வாளா் உடையாா்சாமி தலைமையிலான போலீஸாா், புளியங்குடி வம்சவிருத்தி நகா் அருகே வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அவ்வழியாக வந்த பைக்கை மறித்து சோதனையிட்டனா்.

சோதனையில் பைக்கில் 43 கிலோ புகையிலைப் பொருள்கள் இருப்பது தெரியவந்தது. இதைத் தொடா்ந்து, புகையிலைப் பொருள்களையும், பைக்கையும் பறிமுதல் செய்த போலீஸாா், புளியங்குடி சந்தை ஓடை தெருவைச் சோ்ந்த சையதுஅலியை(41) கைது செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com